Social Activity

  • Home
  • Social Activity
No.98

குன்னூத்துப்பட்டி வாசிநகர் குறிஞ்சிநகர் மையப் பகுதியில் தோட்டங்களுக்கு ஒரு டிரான்ஸ்பார்மர் மட்டுமே இருந்ததால் ஏற்படும் மின் பற்றாக்குறையால் கிராமங்களின் குடிநீர் மோட்டார் முறையாக இயக்க முடியவில்லை அதனால் இந்த மூன்று கிராம குடிநீர் மோட்டார் இயக்குவதற்கு மட்டும் தனியாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைத்து கொடுக்க வேண்டும் என எட்டு ஊர் இளைஞர் குழுவினர் கோரிக்கையை முன்னெடுத்து அதை அனைத்து விவசாய சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பு கௌரவத் தலைவர் *மதிப்பிற்குரிய திரு MP ராமன் அவர்களின் உதவியுடன் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் அதன் பலனாக இன்று நமக்கு குடிநீர் மோட்டார் இயக்குவதற்கு என 9 போஸ்ட் மரம் ஊண்டி தனியாக ஒரு சிறிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுத்துள்ளனர் இதற்கு உதவியாக இருந்த மதிப்பிற்குரிய திரு ராமன் ஐயா அவர்களுக்கும் உசிலம்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் திரு ரஞ்சித் குமார் போர் மேன், திரு லிங்கம் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்து JCP உதவி வழங்கிய குன்னூத்துப்பட்டி வாசிநகர் குறிஞ்சிநகர் கிராம பொதுமக்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகள் எட்டு ஊர் இளைஞர் குழு கிராம பொதுமக்கள் என அனைவரையும் திட்டம் நிறைவேறும் வரை தொடர்ந்து ஒருங்கிணைத்த குன்னூத்துப்பட்டி* மதிப்பிற்குரிய* திரு அம்மாசி அப்பா அவர்களுக்கும் நன்றி

No.97

நமது தொட்டப்பாநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி இளைஞர்கள் முன்னெடுக்கும் பொது பிரச்சனைகளுக்கு துணை நின்று இளைஞர்கள் பொது மக்களின் அன்பைப் பெற்று எளியவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்போதும் எளிமையாக அணுகக் கூடியவராக மிகவும் சிறப்பாக மக்கள் பணி செய்த தொட்டப்பநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் மதிப்பிற்குரிய திரு சசிகுமார் அவர்களின் மக்கள் பணி இன்று போல் என்றும் செம்மையாக சிறப்பாக நடைபெற எங்கள் கிராம பொதுமக்கள் சார்பாகவும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தற்போது பணியிடை மாறுதல் காரணமாக செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளம் கிராம மக்களுக்கு உங்களின் சேவை கிடைப்பதில் மகிழ்ச்சி உங்களின் சேவை அங்கும் சிறக்க வாழ்த்துக்கள் உங்களின் அன்பும் சேவையும் எப்போதும் எங்கள் பகுதி மக்களுக்கும் இளைஞர்களுக்கும் கிடைக்கட்டும் ஐயா
பங்களிப்பு :
சால்வை: 2 திரு ராதாகிருஷ்ணன் சர்வேஷ் பாண்டி பிராய்லர் தொ,விளக்கு

No.7 Dated:15/01/24

நமது அண்ணா நகரில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டி எட்டு ஊர் இளைஞர் குழு முயற்சியால் அண்ணாநகர் பகுதியில் சிமெண்ட் சாலை பணி தற்போது நடைபெறுகிறது இதற்கு உறுதுணையாக இருந்த உசிலம்பட்டி கிராம ஊரக வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் , தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கும், ஊராட்சி செயலாளர் அவர்களுக்கு நன்றி

No.8

T குன்னூத்துப்பட்டி அழகுமலை அவர்களின் மகளுக்கு உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதை மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் உயர்திரு திரு Dr.செல்வராஜ் ஐயா அவர்களின் கவனத்திற்கு எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக கொண்டு செல்லப்பட்டது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சேவை கிடைப்பதை உறுதி செய்ய ஐயா அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக இன்று 19/6/24 நல்ல முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்ற மகிழ்ச்சியான செய்தி சரியான நேரத்தில் சரியாக மக்கள் பணி செய்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் உயர்திரு திரு Dr.செல்வராஜ் ஐயா அவர்களுக்கு எட்டுஊர் இளைஞர் குழு சார்பாக நன்றி

No.9

இன்று 19/06/24 நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அசுவமனா நதி அணையை தூர்வாரி கிளைக் கால்வாய் மற்றும் வரத்து கால்வாய் பராமத்து பணி செய்து சீமை கருவேலை மரங்களை அகற்றி அணையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இன்று எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது

No.16

நம்ம 8 ஊர் இளைஞர் குழு தளத்தில் பயணிக்கும் மனிதநேயர் டாக்டர் N ரஞ்சித் குமார் அவர்களின் ஆகச் சிறந்த மனிதநேய செயல்பாடுகளை கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அங்கீகரித்து கௌரவித்துள்ளார்கள். இந்த மாமனிதரை நம்ம 8 ஊர் இளைஞர் குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக நாளை 01/09/24 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 30 PM மணி அளவில் T குன்னூத்துப்பட்டி கிராம பொது மந்தையில் அனைத்து விவசாய சங்க மாநில ஒருங்கிணைப்பு கௌரவ தலைவர் விவசாயிகளின் தோழன் திருMP ராமன் அவர்கள் கலந்து கொண்டு நமது சார்பாக கௌரவிக்க உள்ளார்.. .. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான நம் பகுதியின் இயற்கைக்கும் நீர் நிலைகளுக்கும் பெரும் அரணாக இருக்கும் அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு மாநில கௌரவத் தலைவர் விவசாயிகளின் தோழன் திரு MP ராமன் அவர்களிடம் நம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அசுவமாநதி அணையில் சீமை கருவேலை மரங்களை அகற்றி தூர்வாரி வரத்து கால்வாய் சீரமைக்கவும். நம் பகுதியில் விவசாயிகளுக்கு அடிக்கடி ஏற்படும் மின்சார பிரச்சனைக்கு ( டிரான்ஸ்பார்மர்) நிரந்தர தீர்வு காண அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு நம்ம 8 ஊர் இளைஞர் குழுவினர் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கும் திரு MP ராமன் அவர்களிடம் கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். நம்ம 8 ஊர் இளைஞர் குழுவின் குருதிக்கொடையாளர்கள் 1 திரு K சிவா 2 திரு A மணி குமரேசன் 3 திரு S மலை ராஜா 4 திரு C சிவசாமி (மற்றும்) நமது அண்ணா நகர் பகுதி இளம் சமூக சிந்தனையாளர்களின் செயல்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பாகவும் நம்ம 8 ஊர் இளைஞர் குழுவின் சார்பாகவும் வாழ்த்தி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

No.23

குன்னுத்துப்பட்டி கிராமத்தில் நம்ம 8ஊர்‌ இளைஞர்கள் குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற தன்னார்வலர் Dr.ரஞ்சித்குமார் அவர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு‌ அழைப்பாளராக அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் மாநில கௌரவ தலைவர் விவசாயிகளின் பாதுகாவலர் மதிப்பிற்குரிய M.P.ராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்த நிகழ்வில் நமது கிராம வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது நல்ல செயலை ஊக்கப்படுத்தவும் நமது கிராம வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் நம்ம 8 ஊர் இளைஞர் குழுவினர்களுக்கு கிராம பெரியவர்கள் பொதுமக்கள் ஆதரவளித்தது மகிழ்ச்சியும் ஊக்கத்தையும் அளித்தது

No.27

தொட்டப்ப நாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களையும் முதியவர்களையும் அவமரியாதையாக மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நடந்து கொள்வதால் இன்று எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக சென்று விளக்கம் கேட்கப்பட்ட போது நிர்வாகம் முறையான தகவல் அளிக்காமல் முன்னுக்கு பின்னாக தகவல் அளித்ததால் விளக்கம் போதிய திருப்தி அளிக்காததால் நாளை காலை மீண்டும் 9:15 மணி அளவில் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முதல் நிலை அதிகாரியோடு சந்தித்து குறைகளை சுட்டிக்காட்ட உள்ளனர் எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர்கள் மீண்டும் நாளை காலை 9:15 மணி அளவில் தொட்டப்ப நாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக வருமாறு கேட்டுக்கொள்கிறோம் முறையற்ற நிர்வாகத்தை சரியான பாதையில் சீர் செய்ய முயற்சிக்கும் இளைஞர்களின் முயற்சிக்கு நிர்வாகம் இனிவரும் காலங்களில் இது போன்ற குறைகள் வராது என்ற உத்தரவாதம் அளித்துள்ளார்கள்

No.30

செட்டியபட்டி மயானத்தில் குளியல் தொட்டி மற்றும் போர்வெல் அமைக்கவும் & செட்டியபட்டி தெற்கு பகுதி நீதிபதி தெருவில் பேவர்பிளாக் சாலை அமைத்துக் கொடுக்க எட்டு ஊர் இளைஞர் குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்று நம் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி ஊராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டது.

No.58

எங்கள் கிராமத்திற்கு நியாய விலை கடை கேட்டு மனு இங்கு 350 குடும்பங்களும் 250 குடும்ப அட்டைதாரர்களும் வாழ்ந்து வருகிறோம் எங்கள் கிராமத்தில் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் முதியவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் முகவர்களாக இருக்கிறோம் ஐயா எனவே எங்கள் கிராமத்தில் வாழும் பெரியவர்களின் உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதியவர்களின் நலன் காக்க எங்கள் கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தங்களால் இயன்ற நிதி உதவி அளித்து நியாய விலை கடை செயல்படுவதற்காக கட்டடம் கட்டும் பணி முழுமையாக நிறைவு பெற்று உள்ளது ஐயா பகுதி நேர நியாய விலை கடையைத் திறக்க அனுமதிக்க கிராமத்து இளைஞர்கள் கிராமத்தின் சார்பாக அய்யாவின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் நியாய விலை கடையை இந்த கட்டிடத்தில் திறந்து வைத்து எங்கள் கிராம இளைஞர்களின் முயற்சிக்கும் எங்கள் கிராம பெரியவர்களுக்கும் உதவிடுமாறு ஐயா அவர்களின் கவனத்திற்கு கடந்த 30 /01/24 கொண்டு வந்தோம் எங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஐயா அவர்கள் நியாயவிலைக் கடை வேண்டி உயர்திரு கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அவர்களுக்கு நீங்களே பரிந்துரைத்து கடிதம் எழுதிக் கொடுத்தீர்கள் ஐயா அதன் பலனாக கூட்டுறவுத் துறையில் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது மேலும் அய்யாவின் உதவியுடன் கிராம இளைஞர்கள் உயர்திரு உசிலம்பட்டி வட்ட வழங்கல் அலுவலரின் கவனத்திற்கு 06/03/24 கொண்டு செல்லப்பட்டது இதனால் 20/03/24அன்று மதுரை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் எங்கள் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டிடத்தை ஆய்வு செய்தார்கள் ஐயா அதில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் கிராம இளைஞர்களும் பொதுமக்களும் மீண்டும் அய்யாவின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் ஐயா அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி நியாய விலை கடையை செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

No.65

T செட்டியபட்டி சோலை கல்லூரி அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவரை உரிய நபரிடமோ அல்லது மனநல காப்பகத்திலோ ஒப்படைக்க சமூக அக்கறையுடன் எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக அவரை பெரியகுளம் அரசு மனநல மருத்துவமனை காப்பகத்தில் ஒப்படைக்க முயற்சி எடுத்த காவல் துறையைச் சார்ந்த மரியாதைக்குரிய திரு லிங்கம் CID அவர்களுக்கும் நமது தொட்டப்ப நாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் மதிப்பிற்குரிய திரு சசிகுமார் அவர்களுக்கும் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் மரியாதைக்குரிய திரு பாலமுருக மகாராஜா அவர்களுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மறுவாழ்வு அளிக்கும் M சுப்புலா புரத்தைச் சேர்ந்த மனித நேயர் மாமனிதர் மரியாதைக்குரிய திரு ரஞ்சித் குமார் அவர்களுக்கும் நன்றிகள் பல கோடி நன்றி உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் தான் இன்னும் இந்த பூமியில் மனித நேயமும் மனிதமும் வளர்கிறது எல்லாம் வல்ல ஈசனின் இறையருளும் இயற்கை அன்னையின் ஆசீர்வாதமும் கிடைத்து நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

No.78

நேற்று எட்டு ஊர் இளைஞர் குழுவினர் உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் DSP உயர்திரு நல்லு ஐயா அவர்களை சந்தித்து நமது செட்டியபட்டி கிராமத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து தர கோரியும் செட்டியபட்டியில் நடைபெறும் சட்ட விரோத மதுவிற்பனை தடுத்து நம் பகுதி இளைஞர்களை மது பகழக்கத்திலிருந்த மீட்டுத் தரக் கோரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. நமது ஊர் மீதான இளைஞர்களின் அக்கரையை பார்த்து நம்ம எட்டு ஊர் இளைஞர் குழுவினரை உயர்திரு DSP அவர்கள் வாழ்த்தி நம்பிக்கையும் அளித்தார். இது போன்ற இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு பொது செயல்பாட்டுக்கு எப்போதும் காவல்துறை துணை நிற்கும் தொடர்ந்து இளைஞர்கள் இதுபோ‌ன்ற நற்செயல்களில் ஈடுபடுமாறு அறிவுரை வழங்கினார். நம்ம எட்டு ஊர் இளைஞர் குழுவினரை போல் வேறு எந்த கிராமத்திலிருந்தும் இது மாதிரியான பொது பிரச்னைகளில் இளைஞர்கள் ஒற்றுமையாக வருவதில்லை அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தான் காவல் நிலையம் வருவார்கள் ஆனால் நம்ம எட்டு ஊர் இளைஞர் குழுவினர் மட்டுமே ஊரின் நலன் கருதி தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி மேலும் அங்கிருந்த மற்ற காவல் துறை அதிகாரிகளும் நமக்கு ஊக்கமளித்தனர். எட்டு ஊர் இளைஞர் குழுவினரின் நற்செயல்களுக்கு ஆதரவளித்த உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கும் மேலும் நம்ம இளைஞர் குழுவின் நற்செயல்கள் மற்றும் அடுத்த கட்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் மதிப்பிற்குரிய லிங்கம் CID அவர்களுக்கும் நம்ம எட்டு ஊர் இளைஞர் குழு மற்றும் பொதுமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

No.85

நேற்று 23.05.25 உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு சந்திரசேகர் DSP ஐயா அவர்கள் செட்டியபட்டி பகுதிக்கு கள ஆய்விற்காக வந்த போது அவரிடம் எங்கள் ஊர் இளைஞர்களை மது பழக்கத்திலிருந்த மீட்க ஏதுவாக செட்டியபட்டி மற்றும் குறிஞ்சி நகர் விலக்கு ஆகிய 2 இடங்களில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை நிரந்தரமாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தோம். மேலும் எட்டு ஊர் இளைஞர் குழுவின் சமூக செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினோம்... எட்டு ஊர் இளைஞர் குழுவின் செயல்பாடுகளை கேட்டறிந்த உயர்திரு DSP ஐயா அவர்கள் எட்டு ஊர் இளைஞர் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் இது போன்று இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கும் சமூக செயல்பாடுகளுக்கும் காவல்துறை எப்போதும் துணை நிற்கும் தொடர்ந்து இளைஞர்கள் நேர்மையான முறையில் நற்செயல்களில் ஈடுபடுமாறு கூறியதுடன் கிராம நலன் சார்ந்து பொது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் அல்லது ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் எங்களிடம் தெரிவியுங்கள் என கூறி இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.. இளைஞர்கள் ஒற்றுமையாக செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தொடர்ந்து இது போலவே ஒற்றுமையாக செயல்படுமாறு அறிவுரை வழங்கினார்.. உயர்திரு சந்திரசேகர் DSP ஐயாவை போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் இளைஞர்களிடம் நீண்ட நேரமாக பசத்துடன் பேசி பாராட்டியது எட்டு ஊர் இளைஞர்களின் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தியது.. எட்டு ஊர் இளைஞர் குழுவினரின் நற்செயல்களுக்கு ஊக்கம் அளிக்கும் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய அதிகாரிகளுக்கும் எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்